Photobucket

Wednesday, December 23, 2009

சா(ஜா)தி

சாதி தமிழர் பெற்ற சாபமா ? வரமா ?.

வள்ளுவம் காணாதது ஜாதி வாழ்க்கை பயணத்தில் நாம் கண்டது

 ஜாதி ஔவை பேசிய ஜாதிக்கும் பாரதி கண்ட ஜாதிக்கும் இன்றைய நடைமுறை சாதிக்கும் நிறைய வேறுபாடு உண்டு ஜாதி

 . சாதி. 

அன்று ஜாதி . 
இன்று சாதி . 
 சாதி சாதிக்கும் 

இன்றைய சாதி நிபுணத்துவம் நோக்கி நகர்கிறது . 

 இதை தமிழர் உணர வேண்டும் அன்றைய சாதி வேறு இன்றைய சாதி வேறு . 

 அன்றைய சாதி ஈனம் செய்யும்

 இன்றைய சாதி இனம் காட்டும் . 

 அன்றைய சாதி உடல் சாதி .அவமதிக்கும் ....புறந்தள்ளும் .

 இன்றைய சாதி துறை சாதி ... நிபுணத்துவம் ஆகும். 

 இன்று, சாதி தமிழர் பெற்ற வரம் .... வரபிரசாதம் . 

 தோணி இயக்குவான் தொல்லை வருணத்து காணிற் கடைப்பட்டான் என்று இகழான் - இது செய்யுள் இவன் படகு ஓட்டுபவன் .இவன் கீழ் சாதி என்று ஆற்றை கடக்கும் அந்த நேரம் படகில் பயணம் செய்யும் எவரும் எண்ண மாட்டார் . படகு ஓட்டுபவனை ஆதாரமாகக் கொண்டு ஆற்றைக் கடந்து போவார் . அப்போது யார் கண்ணுக்கும் சாதி தெரியாது. அன்று அவன் தோணியன் - கீழ் ஜாதி இன்று அவன் போக்குவரத்து துறையன்..(TRANSPORT DEPARTMENT) . 

 வீட்டின் பிணம் விழும் . பிணம் வெட்டியான் எனும் கீழ் ஜாதிகாரன் ஆதிக்கத்தில் இருக்கும் .வெட்டியான் பிணத்தின் எஜமான் . அன்று அவன் வெட்டியான் இன்று அவன் ..( UNDERTAKER ) 


 வீட்டின் மலக் கூடத்தின் தொட்டி / தோம்பு நிறைத்தவுடன் தோட்டியை அதாவது (சக்கிலியனை ) கூப்பிடுவர் . அப்பொழுது சக்கிலி எனும் தோட்டி எஜமான் ஆகி விடுவான். அவன் இல்லை எனில் மேல் சாதிகாரன் பாடு அதோ கதிதான் அன்று அவன் ( தோட்டி ) சக்கிலியன் இன்று அவன் ..( wastewater and sanitation -  sewerage system 

 அன்று முடி சிரைப்பவன் பரியாரி இன்று அவன் ..(SALOON) சிகையலன்காரி 

 அன்று சமையல்காரன் கீழ்ஜாதி இன்று அவன் ..(CHEF) .
 வெளியுலக உணவு முழுதும் அவனது ஆதிக்கம் .

 அன்று சட்டி, முட்டி, சாமான் செய்பவன் குசவன் . இன்று அவன் சிறுதொழில்காரன் ..( INDUSTRY ) 

 அன்று பள்ளத்தில் விழுந்து கிடந்தவன் பள்ளன் . பள்ளமான நீர் தேக்க இடத்தின் விவசாயி அவன் . அதன் நுட்பம் நுணுக்கம் தெரிந்தவன் . அன்று அவன் பள்ளர் இன்று அவன் ..(AGRICULTURE)

 அன்று தென்னை, பனை பாக்கு இறக்கியவன் சாணான் ( நாடார் ) இன்று அவன் வர்த்தகன் /வியாபாரி.

 அன்று பறை சாற்றியவன் பறையன் இன்று அவன் தொடர்பு துறையாளன் ..(COMMUNICATION SECTOR) 


 அன்று பணத்தோடு புரண்டவன் பணக்காரன் ஆனான் - முதல் போட்டவன் முதலி - கட்டு செட்டா கணக்கு போட்டவன் செட்டி அதனால் அவன் மேல்ஜாதி . இன்று ஆங்காங்கு எலாரும் finance


 படைத்தொழில்.... போர்த்தொழில் செயல் இழந்தபின் பிழைக்க வழி இல்லாமல் இருந்தனர் ஒரு பிரிவினர். உடல் பலத்தால் திருட்டும், கள்ளமும் புரிந்து கள்ளர் ஆகினர். உடல் பலமும், தைரியமும், வீரமும், பராக்கிரமமும், நிலை தாழ்ந்தபோதும் அடாவடியாலும் , குண்டர்த்தனதாலும் மேல்ஜாதிகாரனாக தாங்களே தங்களை உருவாக்கிக் கொண்டனர். இன்று அவர்கள் இந்த மண்ணில் நிர்வாகிகள் ;..(MANAGEMENT) . 

 

 ஆடு, மாடு வளர்த்தவர். இடையர் குலம் - கீழ்ஜாதி. பிறகு, அவர் பால் வியாபாரி ஆகியதால் கோனார்/ யாதவர் ஆனார் . கண்ணன் எனும் கடவுள் அந்த சாதியில் வளர்ந்தார் . அதனாலும் அவர் மேல்சாதியாகி விட்டார். இவர் இன்று மேல்ஜாதி 


 ஆதியில் பிராமணர்கள் மேல்ஜாதி, அரசர்கள் மேல்ஜாதி . இடையில் கள்ளர் , முதலி , செட்டி, கோனார்,வன்னியர், கொங்கன் , இப்படியாக மேல்ஜாதி . இன்றோ பல்லி கவுண்டர், நாடார், பள்ளர் , மேல்ஜாதி ஆகி கொண்டிருக்கின்றனர். பறையர், பாணன், சாணன், சக்கிலி, எல்லாம் வரிசை பிடித்து மேல்ஜாதியாக ஆகி கொண்டிருக்கின்றனர் . நாளை யாரும் கீழ் ஜாதியற்றவர். அவர் அவரும் புதுபெயரும், தோற்றமும் பெறுவர். 


 கள்ளர் எனும் தேவர் குலம், பள்ளர் எனும் தேவேந்திர குளம், சோலி வெள்ளாளன், பிள்ளை, இப்படியாக புது பெயரும் , தோற்றமும் வந்து கொண்டே இருக்கும் . 

இதுவே தீர்ப்பு . 


 பணம் உள்ளவர் எல்லாம் ; பணம் படைத்தவர் எல்லாம் இனி கீழ்சாதியாகார் ; எல்லாரும் மேல்ஜாதி . கோடிஸ்வர ஆனந்த கிருஷ்ணன் வீட்டில் பிராமணன் சம்மந்தம் செய்வான்.

 இளையராஜா, எ. ஆர். ரஹ்மான், விஜய், விஜயகாந்த் , எல்லாருமே இனி மேல்ஜாதிதான். 

மலேசிய மண்ணில் சாதி - எம் .ஜி .பண்டிதன் அரசியல் போர் தொடுத்த போதே கதிகலங்கி விட்டது. அன்று தொட்டு அது சாதிக்க தொடங்கி விட்டது. எல்லாம் புது புது முலாம் பூசி பளிச்சென்று ஆகி விடும் . 


 இப்படியாக இன்று எல்லாரும் மேல்ஜாதியாக மாறி கொண்டிருக்கையில் இன்று இன்னும் இழிநிலை . 


இம்மண்ணில் தமிழர் இழிநிலையில் உள்ளதை நம்மால் உணர முடிகிறதே !! அது என்ன வகை இழிவுநிலை....!! 

அதை சிந்திக்க வேண்டும் . 

 நிலைகெட்ட மனிதர்- தமிழர் நெஞ்சு பொறுக்குதில்லை நிலைகெட்ட மனிதர் இவர் .... என்றான் பாரதி . ஆம்! தமிழர் நிலை கெட்டவர் தன்னிலை மறந்தவர் . உன்னையே நீ அறி என்று இவர்களை பார்த்து கண்டிப்பாக சொல்ல வேண்டும் சாதியில் உயர்ந்ருந்தாலும் தமிழன் தன்னிலை மறக்கிறான்.  பெரும் பணக்காரர்கள் பலர் யாராயிருந்தாலும் தமிழர்களாக இருந்தால் தன்னிலை மறக்கின்றனர். ஏழையாக இருந்தாலும் தமிழர் தன்னிலை மறக்கின்றனர் . 


 உன்னையே நீ அறி என்று நாம் சொல்ல நேரும் போது தன்னிலை மறந்த தமிழர்களே முன் நிற்பர் . 


 தன்னிலை மறந்த தமிழரைதான் பாரதி நிலைகெட்ட மனிதன் என்றான். 


நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டல் ..... நெஞ்சு பொறுக்குதிலை என்றான். 


 பாரதி கண்ட அந்த நிலைகெட்ட மனிதரை யார் ? 
அவர் எப்படி இருப்பார் ? 
என்ன செய்வார் ? 

ஆம்,

நிலைகெட்ட மாந்தர் தன் இன மனம் , மொழி மானம் இல்லாது காக்காது , பணம் பதவி பட்டம் பொருள் இச்சித்து கையேந்தி அடிமை வாழ்வு வாழ்வார். 

Monday, November 23, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 8


கவலைக்கு வரவு சொல்வோம் , விருந்து வைத்து அனுப்புவோம்

தீட்டின மரத்தில்
கூர் பார்க்கப்படும்


வேளை வந்தால்
வளர்ந்த கடா மார்பில் பாயும்


பாலை வார்த்தும் பாம்பு
விசத்தின் மயம் .


புலி பதுங்குகிறது
பாய்ந்து விடும் .


தடம் பார்க்கும்
யானைக்கும் அடி சறுக்கும் .





துன்பம் தரும் கவலைகள்
வந்து  போகும்  .,
வந்த  பின் காப்பது மூடத்தனம் ,
வருகையில்  காப்பது  அமளித்தனம்  . 
நல்ல  ஏமாளித்தனம்.




முன்னறிந்த  வல்லமையால்
வரவு  சொல்வோம் .
வந்து  போகும்  கவலைக்கு 
விருந்து வைப்போம் .... 

வெளி  செல்லும்  வேளை  வரை 
சொந்தம்  என்று  அதனையே 
உறவு  சொல்வோம்.

காலம்  வரும்  
காலம் வரை காத்திருப்போம் 
விடிவு  காலம்  வரும்  
வேளை  வந்தால் 
அனுப்பி  வைப்போம் .
வழி  அனுப்பி  வைப்போம்.



(ஆக்கம்: 18/11/2001)

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 7


இயல்புகள் மீறி எதுவும் இயங்க! இருக்கும் கவலைகள் விட்டு விடுவோம்!

சிறகு முளைத்க் குஞ்சு பறவை
கூட்டில் இருப்பது இல்லை .
ஊட்டி வளர்த்த தாய் பறவைக்கு
விடை பெறும் நாள் சொன்னதும் இல்லை .


மரங்கள் பழுத்தப் பழங்களைக்
காம்புகளில் தாங்குவது இல்லை
பழுத்த பழங்கள் அதுபோல
விடுபட தயங்குவதும் இல்லை .


பூத்துக் குலுங்கிய வாச மலர்கள்
மரஞ் செடி
  கொடிகளுக்குச்
சொந்தம் ஆனது  இல்லை -
வளர்த்தக் கடனை 

எதுவும் நினைத்தும் இல்லை.


காய் அதனில் முதிர்ந்த விதைகள்
வெடித்து விடுபட்டு வெளியேறும்
சில காய் அதனில் முளைவிட்டு
முந்தி முளைக்கப் பாடுபடும்


அது அதற்கும் அது பண்பியல்பு
எல்லாம் இங்கு குண நலன்கள்
இயல்புகள் இருக்கும் வகை, வாகை அறிவோம்
கவலைக்கு ஏது இடம் விட்டுவிடுவோம்



நன்றி மறப்பது நன்று ஆவது இல்லை
மறக்கப்படும் நன்றிகளை மறந்து விடுவோம்
செய்த நன்றி  ஆங்காங்கு   மறக்கப் படும்.
இயல்புகள் மீறி எதுவும் இயங்கப் பெறா


உப்பிட்டவரை உள்ள அளவும் -நன்றி
உள்ளத்தில் இருத்துதல் மாந்தர்க் கடன்
உப்புப்பு அற்றதுபோல் மறந்து விட்டால்
விட்ட குறை தொட்ட குறை விட்டுவிடுவோம்


பலன் கருதா சேவைகள் பாரில் வேண்டும்
பற்றற்ற உயர்தர செயல்கள் செய்வோம்
செய்தற்கு நன்றி கடன், பிரதி பலன்
எதிர்ப்பார்த்தல் இருப்பின் அது சுத்தின் நலம்


தென்னையின் வேருக்கு நீர் விட்டால்
தென்னங் காயில் பிறகு
நீர் தருது
எங்கும்  நிறைந்த ஒரு பொது  தருமம்

எப்போதும்  எங்கெங்கும் 
தன் கடன்கள் செய்யும் .
எதோ  ஒரு ரூபத்தில்
நம்மை  வாழ  வைக்கும்.
நன்கு  காத்து  நிற்கும் .



(ஆக்கம்: 18.11.2001)

Saturday, November 14, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 6


யாருக்கு வேண்டும் இங்கு கவலைகள், விட்டு விடுபடுவது வாழ்க்கை

எல்லாம் அறிந்தவர்
கவலைப்பட மாட்டார் .


கவலைப்பட மாட்டாதவர்
எல்லாம் அறிந்தவராக இருக்கிறார் .


எல்லாம் அறிந்தவர்
விட்டு விடுபடுவார் ;
வெளிப்பட்டு வந்து விடுவார் .


கவலைப்படாமை
விட்டு விடுதலில் ....
விட்டு விட்டு வந்து விடுதலில் ....
விட்டு விடுபடுவதில் ....
அடங்கி இருக்கிறது .



விட்டு விடுதல் ;
விட்டு விட்டுபட்டு வந்து விடுதல் ;
விட்டு விடுபடுதல் ....
வாழ்க்கையை அல்ல .
செயல்களை அல்ல .
செயல்களின் விளைவுகளை ,
நன்மை தீமைகள் அல்ல .
அதன் பலா பலன்களை !


யாருக்கு வேண்டும் இங்கு பலா பலன்கள்?
சேர வேண்டிய பலன்கள்
சேரும் இடம் சேர்ந்து விட்டு
சேர்ப்பித்து விட்டு,
விட்டு விடுபட்டு வந்து விடுவர்
எல்லாம் அறிந்தவர் ....
கவலைப்பட மாட்டாதவர் .


எல்லாம் அறிந்தவர் ....
கவலைப்பட மாட்டாதவர் ....
செயல்களை விடமாட்டார் .
செயல்களின் விளைவுகளை ....
நன்மை தீமைகளை விடமாட்டார் -அவர்
செயல்களின் பலா பலன்களை  மட்டுமே
விட்டு விடுவார்- அதிலிருந்து
விடுபட்டு வந்து விடுவார் .


விட்டு விடுதல்
விட்டு விட்டு வந்து விடுதல்
விடுபட்டு வந்து விடுதல்
விட்டு விடுபடுதல்
பற்றற்றல் எனப்படும்


பற்றற்றல்
பலன்களைத் துறப்பதில் இருக்கிறது
பலா பலன்களை அர்ப்பணம் செய்வதில் இருக்கிறது
பலா பலன்களை சமர்ப்பணம் செய்வதில் இருக்கிறது


பற்றற்ற நிலை ,
பலன்களை துறக்கும் நிலை ,
பலா பலன்களை
அர்ப்பணம் செய்யும் நிலை ;
சமர்ப்பணம் செய்யும் நிலை ;
கை கழுவும் செயல் அல்ல .
தலை முழுகும் செயல் அல்ல .
நட்டாற்றில் விடுதல் செயல் அல்ல .
நம்பிக்கை மோசம் அல்ல .


கை கழுவுதல் -
பொறுப்பில் இருந்தும் விலகும் செயல் .
தலை முழுகுதல் -
உறவைத் துண்டிக்கும் செயல் ;
தொடர்பை விட்டு விடும் செயல் .
நட்டாற்றில் விடுதல் -
தத்தளிக்க...தவிக்க...,
தடுமாற வைக்கும் செயல் .
நம்பிக்கை மோசம் -
ஏமாற்றும் செயல் .


தாமரை
இலையில் , திரண்ட தண்ணீர்
பற்றற்ற நிலையில் உள்ளது ;
இலையில் பற்றாமல் இருக்கிறது .
தாளின் ஆட்டத்திற்கு ;ஏற்ப
நீரின் ஆட்டத்திற்கு ;
அசைந்தாடும் காற்றின் ஆட்டத்திற்கு ;
ஆட்டம் போடுகிறது ...உருளுகிறது
அவ்வப்போது உருண்ட
அது
சிலவேளை தத்தளிக்கிறது ....
அங்கும் இங்கும் அலைக்கழிந்து
அலைக்கழிக்கப்பட்டு
முடிவில் சேருமிடம் சேருகிறது
நீரோடு நீராகிறது .


பற்றற்ற நிலை
தாமரை
இலையில்
திரண்டு உருண்ட தண்ணீர் போல் இருக்கிறது .



பற்றற்ற நிலை
தாமரை இலையின் தண்ணீரின்
தத்தளிப்பு....
அலைக்கழிப்பு ... அல்ல
மரம் ஒன்று நடப்படுகிறது -செயல்


நடப்பட்ட மரம் வளர்ந்து ஆளாகிறது .
ஆளாகிய மரக் கிளைகள் தோறும்
பூப்பூத்து காய்கள் -செயலின் விளைவு


பூத்து காய்த்த
காய்கள், பழங்கள்
சிலவற்றில் புழு, பூச்சிகள் .
சில அரிப்பட்டு விட்டன .
சில உழுத்து, புழுத்து விட்டன .
பிஞ்சிலே பழுத்து வெம்பி ,
வீழ்ந்து விட்டன சில .
பல காய்த்து பழுத்து
கனியத் தொடங்கி விட்டன -
விளைவுகளின் நன்மை தீமைகள்
-விளைவுகளின் நல்லது கெட்டதுகள்


கனிந்த பழங்கள்
மிளிர்ந்து காணக் கிடக்கின்றன
கண் கொள்ளாக் காட்சி தருகின்றன .
வா !... என்று இரந்து அழைக்காத
வௌவால்கள் ... பறவையினங்கள்
உண்டு மகிழ்ந்து, வந்து போகின்றன .


பறிப்பதும்
தின்பதும் ....
விற்பதும் பையும் கையும் பணமுமாக
மரத்துக்குச்  சொந்தக்காரர் .
அவரவர்க்கும், அது அதுக்கும்
தேவை நிறைவு ஏறியதில்
ஏதோ ஒரு மன நிறைவு
ஆங்காங்கு ஆத்ம திருப்தி -செயலின் பலாபலன்கள்


செயல்
செயலின் விளைவு
செயலின் நன்மை தீமைகள்
செயலின் பலா பலன்கள்
அவ்வாறாக- அந்த மரமாக இருக்கின்றன .
பலன் கருதா சேவை- அந்த மரத்திற்கு உரியது .


சளைக்காத அந்த மரம்
இப்போது! இந்த வேளை...
பற்றற்ற நிலைக்கு
விட்டு விடுவதற்கு
விடுபட விரும்புதலுக்கு
தயாராகிறது; வினையாற்றுகிறது .


கிட்டாத தூரத்தில்
எட்டி இருந்த பழங்கள் ;
இலைமறை காய் வகை
மறைவு பட்ட பழங்கள் ....
சொந்தம் பாராட்டாத மரத்தினின்று
உரிமை விரும்பா மரத்தினின்று
நீங்கல்படு பொருள் ஆகின்றன .
மரத்தின் வகையறிந்து, வாகையரிந்து
காம்புகள் பழங்களை
விட்டு விட்டன ;
விடுபட செய்து விட்டன .
பற்றற்ற நிலை -அந்த மரத்தினது .


விடுப்பட்ட பழங்கள்
வீழ்ந்த பழங்கள்
கிட்டி வந்து உணவாகி -ஆங்காங்கு
உண்ணு பொருள் ஆகின்றன .
பழுது பட்டன
மண்ணுக்கு உரமாகின்றன .
அவை அவற்றிற்குரிய
செயல்களில் இருக்கின்றன .


இதில் கவலைப்பட என்ன இருக்கிறது !


விட்டு விட விரும்பியது மரமா !
விடுபட்டு வந்து விட ;
விட்டு விட்டு வந்து விட ;
விட்டு விடுபடுதலை விரும்பியது பழமா ?
ஏதோ ஒரு விதி
எப்போதுமே எல்லாருக்குமே
பொதுவில் அமைந்ததாக
நடுநிலை தவறாததாக
இருந்து கொண்டே இருக்கிறது .


யாருக்கு வேண்டும் இங்கு கவலைகள் ?
விட்டு விடுவது
விட்டு விடுபட்டு   வந்து  விடுவது
நிர்மூலம் அல்ல .....நிரந்தரம்
( நிரந்தரம்= இறை )
அது நிலையானது .
நிலைப்பேறு பெற்றது .
சாகா வரம் பெற்றது
சிரஞ்சீவி ....


பழங்கள் அதற்குரிய செயலில்
இருப்பதுபோல்
மரம் அதற்குரிய செயலில் இருக்கிறது .
மீண்டும் மீண்டும்
புதுப் புது பூக்கள்
பூத்துக் குழுங்க ....
பூப்பூத்து காய்க்க ....
காய்த்து கனிய ......
பலன் கருதா சேவை
பற்றற்ற சேவை
தொடரும் கதையாகிறது .


யாருக்கும்  வேண்டாம் கவலைகள் .....
விட்டு விடுவது
விட்டு விடுபடுவது- வாழ்க்கை .
எங்கும் நிறைந்த ஞானம்
மறக்கபட்டதாக இருக்கிறது
அது மரத்தோடு மட்டுமே ....
மர
ஞ் செடி கொடிகளோடு மட்டுமே வாழ்கிறது .


அறிய வேண்டும் நாம் !
விட்டு விடுதல் ....
விட்டு விடுபடுதல் ......
நிர்மூலம் அல்ல.... நிரந்தரம்
நிரந்தரம்   எனும்   இறை ....இறையாண்மை .


(ஆக்கம்: 18/11/2001)

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 5


குற்றம் குற்றமாக இருப்பதில்லை, கவலைப்பட ஏதுமில்லை!

பூவிற்கு புறவிதழாகிய குற்றம் உள்ளது .
சில பூக்களுக்கு
துர்நாற்றமாகிய குற்றம் உள்ளது .


நீருக்கு நுரையாகிய குற்றம் உள்ளது .
குளம், குட்டை, ஆறு, ஏரி, அருவி, ஓடை
நீர்நிலைகளுக்கு நீர்ப்பெருக்கு - எனும்
வெள்ளமாகிய குற்றம் உள்ளது



கடலுக்குக்
கொதித்து எழும் அலை குற்றமாக உள்ளது


பூமிக்குள் பூகம்பம்(நிலநடுக்கம்) குற்றமாக உள்ளது
அதன் நிலத்திற்கு நிலச்சரியவாகிய குற்றம் உள்ளது


ஒளி தரும், வெப்பம் தரும் சூரியனுக்குள்
சுட்டெரியும் அனல், வெயில் குற்றமாக உள்ளது


குளிர் தரும் நிலவுக்கு கடுங்குளிர் குற்றமாக உள்ளது
எல்லாவற்றுக்கும் மேலாக
எங்கெங்கும் பசுமை சேர்க்கும்
மழை தரும் மேகத்திற்கு
இடி மின்னல் குற்றமாக உள்ளது


இதில் கவலைப்பட என்ன இருக்கிறது..


அன்புக்குள் வன்பு இருக்கிறது
அமைதிக்குள் ஆர்பாட்டம், ஆரவாரம் இருக்கிறது
அழகுக்குள் கோரம் இருக்கிறது
இளமைக்குள் முதுமை இருக்கிறது .
எல்லாவற்றிலுமே எப்போதுமே குற்றம் இருக்கிறது .


அன்புக்குள் வன்பு ......
அளவோடு இருக்க வேண்டும் ;நிதானம் வேண்டும்.




அமைதிக்குள் ஆரவாரம்,
ஆர்ப்பரிப்பு .
எச்சரிக்கை வேண்டும்.

ஆழ்கடல்  அமைதி
என்றைக்குமான  அமைதி  அல்ல.
அது  ஆர்ப்பரிக்கும்  வேளை  வந்தால்
'சுனாமி' ....அதுதான்  கடல்  பெருக்கு




அழகுக்குள் கோரம் .
நடையுடை பாவனை ஒய்யாரத்தில் , மிடுக்கில்
தன் அடக்கம் வேண்டும் .


இளமைக்குள் முதுமை .


இளமை பயணத்தின் நோக்கம் இயலாமை,
எனவே
கதியாகும் இறையைச்
சரணாகதியை .....
கைக் கூப்பி தொழுதல் வேண்டும் .
பணிந்து
ஏத்து
பக்தி செய்ய
பழக்கி வைக்க வேண்டும் -மதியைத்
துதிக்க வைக்க வேண்டும் ...


வன்பு, ஆரவாரம், கோரம், முதுமை ...
எதிர்மறைக
ளை எதிர் கொள்ள வேண்டும் ;
அனுமதிக்க வேண்டும் .
கவலைக்கு இங்கு எதற்கு இடம் .


வன்பு அன்பாக மாறும் .
பகை வளர்க்க கூடாது... .
பொறுத்துப்   பார்க்க  வேண்டும் .


ஆராவரம் ஆர்ப்பாட்ட
த்திற்குள்
அமைதி பிறக்கும் .
மிதம் வேண்டும் .
மிகைப்படுத்தாமல் இருக்க வேண்டும் .


சினம் சிரிப்பாக மாறும் .
அடுப்பில் வைத்தகாலை
நீர் கொண்ட வெப்பம்
பின் தானே தணியும் .
குற்றங்கள் மறக்கப்பட வேண்டும் .


குணங்கள் அறியப்பட வேண்டும் .

குறைகளின் குணம் மாறும் ....நிறம் மாறும்
புரியும்  உணர்வு   வேண்டும் .


கோரத்துக்குள் அழகு பிறக்கும் .
கூட்டு புழுக்குள் வண்ணத்து பூச்சி .
அருவருப்பு  யாருக்கும்  வேண்டாம்.  


முதுமைக்குள்
முதிர்ச்சி பிறக்கும்
பண்பட்ட பக்குவம் வரும்
கைக் கூப்பி தொழும் 
ஞானம் சித்திக்கும்  .


யாருக்கு வேண்டும்
இங்கு ராச  மரியாதை ....!
முதல் மரியாதை !


சேற்றுக்குள் செந்தாமரைகள் .
குப்பையில் குருக்கத்திப்  பூக்கள் .

காட்டுக்குள்  சந்தன  மரங்கள் .



எப்போதுமே இங்கு
கவலைப்பட வேண்டாத
ஒரு ஞானம் என்றும்
மறக்கப்பட்டதாக  இருக்கிறது.


(ஆக்கம்: 18/11/2001)

Friday, November 13, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 4

இருந்தும் இருக்கிறது ஒரு ஞானம் 'கவலைப் பட வேண்டும்'


மனிதர்கள் நாம்
விவரம் அறிந்தவர்கள்


நாளும் தெரிந்தவர்கள் -பலர்
நன்கு படித்தவர்கள் ; பலர்
நலம் பெறுபவர்கள் ; சிலர்
நலம் கொடுப்பவர்கள்


இந்த உலகியலில்
நாம் வழிப் போக்கர்கள் ;
நடமாடும் நாடோடிகள்
வந்த வழியே
போக வேண்டியவர்கள்.


பலர்க்கு வந்ததும் தெரியாது
வந்த வழியும் தெரியாது .
போகப் போவதன்  வலி  புரியாது ;
போகும் வழியும் தெரியாது....




வந்தவர்கள், வாழ்ந்தவர்கள்
தடம் தெரியாமல், தடம் புரண்டு
இடம் தெரியாமல், இடறி நடந்து
இனி போகப் போகிறார்கள்


சிலர் வந்தவர்கள்
வாழ்ந்து காட்டினார்கள்
பிறரை வாழ்வித்து போனார்கள்


சிலர் வந்தார்கள் ; வாழ்ந்தார்கள்
இடையே சாதித்தார்கள்
பெயர் விளங்கி நின்றார்கள்
அவரவர் வாகைக்குள்
அவரவர் வகைக்குள்
அவரவர் கடமைக்குள் அவரவர்


வருவதும் போவதும் வாழ்க்கை
இருப்பதும் இறப்பதும் இயல்பு
எல்லாம் என்றும் எதார்த்தங்கள்


இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?
இருந்தும் இருக்கிறது ஒரு ஞானம் .
அதன் ஊர் பேர் விலாசம்
'கவலைப்பட
வேண்டும் '


இது நடந்தால் இப்படித்தான் எனும்
கட்டுசெட்டான கவலைகளுக்கு அப்பால் ...
எதார்த்தமான கவலைகள் ;
எத்தேச்சை கவலைகள் ;
சுதந்திரக் கவலைகள்
எப்போதுமே நமக்கு வேண்டும்


நாம் கவலைப்பட வேண்டும்


பட்டும் படாத கவலைகள் ;
தொட்டும் தொடாத கவலைகள்
படாமல் படும் கவலைகள்
பொறுப்பு  எனும்  கவலைகள்
எப்போதுமே நமக்கு வேண்டும் !.




அணைத்தும் அணைக்காத அணைப்புக்குள்
விடாமல் விடுபடும் கவலைகள்
வேண்டும்
அணைக்காமல் அணைக்கும் அணைப்புக்குள்
விட்டு விடுபடும் கவலைகள் வேண்டும்


வானுக்கு மண்ணோடு கவலை இருக்கிறது -
எட்டி நின்று பார்க்கும் கவலை இருக்கிறது !
தொடாமல் தொடும் கவலை இருக்கிறது ;
படாமல் படும் கவலை இருக்கிறது ;
அதனால் மட்டுமே மழைப் பொழிகிறது ;

பெய்விக்கப்...படுகிறது.



மண்ணுக்கு வானோடு கவலை இருக்கிறது -
வழி மேல் விழி வைத்த கவலை இருக்கிறது ;
ஏமாற்றத்துடன் காத்து இருக்கிறது ;
எதிர்ப்பார்ப்புடன் நிற்கிறது ;
அதனால் மட்டுமே மழை பெறுகிறது .



வானுக்கு மண்ணோடு கவலை ;
மண்ணுக்கு வானோடு கவலை -ஆனால்
அவை  பின்னிப்  பிணைந்தா கிடக்கிறது ?
ஒட்டி உறவாடி
யா இருக்கிறது  ?.




நீல  மேகத்தின்   ஊடே
உறையும்  கார்மேக  வானுக்கும் ,
பசுமை  வேண்டும்  மண்ணுக்கும்
எதார்த்தமான... எத்தேச்சையான
எதிர்ப்பார்
ப்புகள்  நிறைந்த  ஏமாற்றங்கள்  கூடிய
கவலைகள் எப்போதும் உண்டு .



நட்பு
பாராட்டும் பரஸ்பர கவலைகள் ...
இப்படியாக இருக்கிறது .
நட்பு
பாராட்டும் பரஸ்பர கவலைகள் ...
இதுபோல் ஆகிறது .



மழை பெய்கிறது
நிலம் குளிர்கிறது


நாமும் கவலைப்பட வேண்டும்


கட்டு செட்டு கவலைகள்....
விட்டு விலக வேண்டும்
எத்தேச்சையான... எதார்த்தமான கவலைக
ளை
நாம் சுற்றிவர வேண்டும்
கவலைகள் நம்மை  சுற்றலாகாது.




கவலைப்பட என்ன இருக்கிறது ...?
எனும் அதற்கு அப்பால்
கவலைப்பட வேண்டும் எனும்
எங்கும் நிறைந்த ஞானம்
இங்கு மறக்கப்பட்டதாக இருக்கிறது !



எல்லாம் இருந்தும் அடைந்தும்
எல்லாம் தெரிந்தும் புரிந்தும்
ஏதேதோ நம்மிடம் எப்போதுமே இல்லை ...


அறிய வேண்டும் நாம் !
நாமும் கவலைப்பட வேண்டும் !.



(ஆக்கம்: 18/11/2001)

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 3


கவலைப்பட வேண்டிய ஒன்று மறக்கப்பட்டதாக இருக்கிறது


'இந்த உலகம்' பொல்லாதது
நன்றி கெட்டது ....
நன்றி கொன்றது ....


'இந்த உலகம்' கெட்டது
கொடுமையானது
கொடூரமானது


காரியவாதிகளின் காரியாலயமிது
சந்தர்ப்பவாதிகளின் இருப்பிடம் இது


'இந்த உலகம்' எனப்படுவது எது ! யார் !


நானும் நீயும்
அவனும் இவளும்
அவர்களும் இவர்களும் என
எல்லாருமாய் ஆகி இருப்பது உலகம்


'இந்த உலகம்' எனப்படுவது நாம்.
நாம் எனப்படுவது இங்கு மனிதர்கள்.


நாம் பொல்லாதவர்கள்
நாமே நன்றி கெட்டவர்கள் ;
நன்றி கொன்றவர்கள்.
நாம்தான் கொடுமையானவர்கள் ;
கொடூரமானவர்கள்.
நம்மை இன்றி
யார் இங்கு கெட்டவர்கள்
காரியவாதிகள்...
சந்தர்ப்பவாதிகள்..
எல்லாரும் இங்கு நாம்தான்


முழுசாய் நாம் மனிதர்கள்
மொத்தத்தில் நாம் பகுத்தறிவாளர்கள்
நல்லவர்கள்... நல்லது செய்பவர்கள் ;
பகுதி பகுதியாய் நாம் கெட்டவர்கள்
கெட்டது செய்பவர்கள்
கெடுதி நினைப்பவர்கள்
ஆம்...!


நாம் உண்ணுவது இங்கு உணவு
உண்பதற்குள்.... உணவு...
உயிர் வதை இருக்கிறது ;
உயிர் பலி இருக்கிறது ;
கொலை இருக்கிறது '
கொலை பலி... பாவம் இருக்கின்றது
உடல் செத்து போகிறது .
ஆவி (உயிர்) பிரிந்து போகிறது
ஆன்மா நீங்கி விடுகிறது .
எனவே,
நமக்கு நாம் இங்கு நல்லவர்கள்
நமது செயலால் நாம் கெட்டவர்கள்


நல்லதுக்குள் கெட்டது இருக்கிறது .
நன்மைக்குள் தீமை இருக்கிறது .
உண்ணும் உணவு என்னும்
சுகத்துக்குள் துக்கம் இருக்கிறது .
பசி பறந்து போச்சி எனும்
இன்பத்துகுள் துன்பம் இருக்கிறது .


நல்லதுக்குள் கெட்டது
நன்மைக்குள் தீமை
சுகத்துக்குள் துக்கம்
இன்பத்துக்குள் துன்பம்
விருப்பத்துக்குள் வெறுப்பு.... அருவருப்பு
எல்லாம் இங்கு இரட்டைகள்
இரட்டைகளால் ஆன உலகில்
ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது வாழ்க்கை .
ஒன்றை ஒன்று வீழ்த்தி
வாழ்ந்திருப்பது வாழ்க்கை .


இன்னும் கவலைப்பட என்ன இருக்கிறது ?


எல்லாமே இங்கு இயற்கை நீதி ;
இயற்கை நியதி.
இயற்கை சீற்றம் எனும் விதி .
எல்லாமே இங்கு வாழ்க்கை சுழற்ச்சி ;
வாழ்க்கை  சக்கரம் . ..  
கர்மவினைகள்  எனும்  வினையடி  வாழ்க்கை..


இருந்தும் இருக்கிறது ஒரு ஞானம் .
கவலைப்பட வேண்டும் .


கவலைப்பட வேண்டிய ஒன்று
மறக்கப்பட்டதாக இருக்கின்றது .


அறிய வேண்டும் நாம் !
ஆத்மா ஞான கவலைகள்
மறக்கப்பட்டு இருக்கின்றன
.

(ஆக்கம்: 18/11/2001)

Thursday, November 12, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 2


நான் ! என் ! எனது எனப்படுவது யாது ! எல்லாம் விதிக்கப்பட்டதாக இருக்கிறது

சிறு துளி, பெரு துளி வாழ்க்கையும்

சிறு துரும்பு, பெரு துரும்பு வாழ்க்கையும்
கடுகளவு, கையளவு வாழ்க்கையும்
மனம்போல், எண்ணம்போல் வாழ்க்கையும்
நிர்ணயிக்கப்பட்ட உலகில்
நிச்சயிக்கப்பட்ட உலகில்
நான் என்று பேச
எனது என்று சொல்ல
என்ன இருக்கிறது இங்கு !
ஏது இருக்கிறது இங்கு !


ஓர் அணுவைக் கூட
மனதிற்கு இசைத்து ....
மனதிற்கு இசைந்து ....
விருப்புக்கு ஏற்ப
அசைக்க முடியாத உலகில்
எது வாழ்க்கை
வாழ்வு எனப்படுவது யாது ?


"தலைவிதிப் படி நடக்கிறது .
விதி வசம் வாழ்க்கை
விந்து உதித்த போதே
வந்துதித்தவாறு வாழ்க்கை
இவை எல்லாமே பிணாத்தல்கள் .
மதி வழி வெல்லலாம்
விதி வழி வாழ்க்கையை ".
மாந்தர் விவேக பேச்சிற்கு
விடை சொல்கிறது  தமிழ்வேதம் -
'விதியை வெல்லும் மதியோடு
பிறக்க வேண்டும் என்பதும்  விதி.'



விதியை வெல்லும் மதி
விதியோடு விளையாடும் மதி- இங்கு
விதிக்கப்பட்டதாக இருக்கிறது ,
அதுவும் வழங்கப்பட்டதாக இருக்கிறது


வழங்கப் பட்ட ஒன்று
பெற்றுக் கொள்ளப்பட்டதாக
ஈயப்பட்டதாக இருக்கும் போதும்
நான்! என்! எனது!
எனப்படுவது யாது ?
பாராட்டப்படுவது எது!


எதையுமே கொண்டு வராத உலகில்
எதையுமே கொண்டு போகமுடியாத உலகில்
கொண்டு வந்தது என்ன?
கொண்டு போகப் போவது என்ன ?


ஏதும் அற்ற நாம்
எல்லாமுமாய் ஆகி இருப்பது
எல்லாமுமாய் ஆகி விடுவது
எப்போது ! எதனால் ! யாரால் !


எங்கும் நிறைந்த ஞானம்
இங்கு மறக்கப்பட்டதாக இருக்கிறது .
அறியப்பட மாட்டாதாய் இருக்கிறது .!.


நான் ! என் ! எனது !
காலத்தை வென்று வீற்றிருக்கிறது .
ஏதுமற்ற அது எல்லாமுமாகி
வெட்ட வெளியாய் வெறுமையாய்
உண்டென்று ஆகி இல்லையென்றும் ஆகி
வாழ்ந்து கொண்டிருக்கிறது
அறிய வேண்டும் நாம் !
ஆத்ம ஞானம் அது ...


ஆத்ம  ஞானக்  கவலை  
இங்கு  மறக்கப்  பட்டதாக  இருக்கிறது. 



(ஆக்கம்: 18/11/2001)