Photobucket

Thursday, November 12, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 2


நான் ! என் ! எனது எனப்படுவது யாது ! எல்லாம் விதிக்கப்பட்டதாக இருக்கிறது

சிறு துளி, பெரு துளி வாழ்க்கையும்

சிறு துரும்பு, பெரு துரும்பு வாழ்க்கையும்
கடுகளவு, கையளவு வாழ்க்கையும்
மனம்போல், எண்ணம்போல் வாழ்க்கையும்
நிர்ணயிக்கப்பட்ட உலகில்
நிச்சயிக்கப்பட்ட உலகில்
நான் என்று பேச
எனது என்று சொல்ல
என்ன இருக்கிறது இங்கு !
ஏது இருக்கிறது இங்கு !


ஓர் அணுவைக் கூட
மனதிற்கு இசைத்து ....
மனதிற்கு இசைந்து ....
விருப்புக்கு ஏற்ப
அசைக்க முடியாத உலகில்
எது வாழ்க்கை
வாழ்வு எனப்படுவது யாது ?


"தலைவிதிப் படி நடக்கிறது .
விதி வசம் வாழ்க்கை
விந்து உதித்த போதே
வந்துதித்தவாறு வாழ்க்கை
இவை எல்லாமே பிணாத்தல்கள் .
மதி வழி வெல்லலாம்
விதி வழி வாழ்க்கையை ".
மாந்தர் விவேக பேச்சிற்கு
விடை சொல்கிறது  தமிழ்வேதம் -
'விதியை வெல்லும் மதியோடு
பிறக்க வேண்டும் என்பதும்  விதி.'



விதியை வெல்லும் மதி
விதியோடு விளையாடும் மதி- இங்கு
விதிக்கப்பட்டதாக இருக்கிறது ,
அதுவும் வழங்கப்பட்டதாக இருக்கிறது


வழங்கப் பட்ட ஒன்று
பெற்றுக் கொள்ளப்பட்டதாக
ஈயப்பட்டதாக இருக்கும் போதும்
நான்! என்! எனது!
எனப்படுவது யாது ?
பாராட்டப்படுவது எது!


எதையுமே கொண்டு வராத உலகில்
எதையுமே கொண்டு போகமுடியாத உலகில்
கொண்டு வந்தது என்ன?
கொண்டு போகப் போவது என்ன ?


ஏதும் அற்ற நாம்
எல்லாமுமாய் ஆகி இருப்பது
எல்லாமுமாய் ஆகி விடுவது
எப்போது ! எதனால் ! யாரால் !


எங்கும் நிறைந்த ஞானம்
இங்கு மறக்கப்பட்டதாக இருக்கிறது .
அறியப்பட மாட்டாதாய் இருக்கிறது .!.


நான் ! என் ! எனது !
காலத்தை வென்று வீற்றிருக்கிறது .
ஏதுமற்ற அது எல்லாமுமாகி
வெட்ட வெளியாய் வெறுமையாய்
உண்டென்று ஆகி இல்லையென்றும் ஆகி
வாழ்ந்து கொண்டிருக்கிறது
அறிய வேண்டும் நாம் !
ஆத்ம ஞானம் அது ...


ஆத்ம  ஞானக்  கவலை  
இங்கு  மறக்கப்  பட்டதாக  இருக்கிறது. 



(ஆக்கம்: 18/11/2001)

No comments: