Photobucket

Tuesday, November 10, 2009

தமிழும் சமயமும்

மண் அறிந்த முதல் மொழி தமிழ் மொழி .


குமரி கண்டம் தொட்டு இமயம் கடந்து , அதற்கு அப்பால் உலகம் மேவி வீற்றிருந்த மொழி தமிழ் மொழிதான் என்கின்றனர் மூதறிஞர் பெருமக்கள் .

காலத்தின் கோலத்தில் ...

உலகத்தின் நாகரீகம் புதுப்புது தோற்றமும் புதுப்புது வாழ்வும் பெற்று பரிணாமம் கண்ட போது தமிழ் மட்டும் தமிழாகவே ஆதியானதாக இன்று வரை இருக்கிறது.


தமிழை பற்றி குறிப்பிடுகையில் .... ஆதி சிவன் பெற்று விட்டான் என்னை அகத்தியன் என்றோன் ஆரியன் இலக்கணம் எழுதினான்   என்றான் பாரதியார் .


ஆரியன் என்றால் பிராமணன் என்று பொருளல்லகற்றறிந்த மனிதன் (Noble Man) என்பதே அகராதி சுட்டும் பொருளாகும்.



'வாழ்க நிரந்தரம் - வாழ்க தமிழ்மொழி ' பாரதியார்.
வாழ்க இறைவன் - வாழ்க தமிழ்மொழி என்பது இதன் பொருள் . இறைவனையே வாழ்க எனும் நெஞ்சுரம் தமிழுக்கு இருக்கிறது.
தன் சுய வாழ்க்கையில் ஆர நிறைவு பெற்ற ஆளால் மட்டும்தான்
கடவுளிடம் வேண்டுதல் வைக்காமல் நீ வாழ்க என வாழ்ந்த முடியும்.



கடவுளுக்கு வாழ்த்து பாடும் அடுத்த நிமிடம் தாய்க்கோ, தந்தைக்கோ, தாய் நாட்டுக்கோ வாழ்த்து பாடாமல் தமிழ்மொழிக்கு வாழ்த்து சொல்லும் திறம் திரம் பாரதி. 
 
இயற்கையாம் இறை ஆகி வரும்போது தமிழ் அந்த இறையோடு இறைவனாகவே ஆகி வந்தது.  இயற்கை ஓசை சத்தம் ஒலி என்பது தமிழ்.  

 இறை என்றால் தமிழ் ;தமிழ் என்றால் இறை .

இறையும் தமிழும் ஒன்றெனில் தமிழும் சமயமும் வெவ்வேறு என்பார் அறிவிலாதார்


சமயம் என்றால் என்ன ? . உணவுப் பொருட்களை சமைத்துப் பக்குவமாக்கினால் சமையல் எனப்படும்; அது போலவே மனிதர்களைச் சமைத்து பக்குவமாக்குவது சமயம் எனப்படும் .


முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தத்தினர் இப்படியாக அனைவருக்கும் வேதங்கள் இருக்கின்றன. அந்த வேதங்கள் அவர்களைச் சமைத்துப் பக்குவமாக்கின்றன. அது போலவே தமிழர்களுக்கு வேதம் இருக்கிறது. அது அவர்களைச் சமைத்துப் பக்குவமாக்கிறது.

திருக்குறள் தமிழர்தம் வேதம் ஆகும் ... மறை ஆகும் ! திருக்குறள் தமிழர்தம் அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் உரைக்கிறது. அறம், பொருள், இன்பம் சார்ந்து ஒழுகப்பட்ட ஒருவன் பக்குவமடைந்த 'வீடு பேறு' எய்துகிறான்.வீடு பேறு என்பது அறம், பொருள், இன்பம் என்னும் நெறியிலிருந்து பிறழாத ஒருவனுக்கு தானாக கிடைக்கிறது.
உலகியல் வாழ்வு முப்பாலால் ஆனது. அதைத்தான் வள்ளுவன் வாழ்க்கை இயலாக காட்டுகிறார்.

இவ்வுலகம் எனும் உலகியல்வாழ்க்கை இயல் ஒழுங்காக வாழ்ந்தால் அதன் முடிவில்  'அவ்வுலகம் இனிதே கிட்டும்'. அவ்வுலகம் எனும் அருளுலகம், இறைவன் உலகம் பற்றி பாட உலகியல் / வாழ்க்கை இயல் நூலாகிய திருக்குறளுக்கு அவசியமில்லை. 'அவ்வுலகம் 'எனும் அருளுலகம் அடைந்த ஒருவன் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள சமயம் இருக்கிறது.
அறம், பொருள் ,இன்பம் பகர்ந்த வள்ளுவ , வீடுபேறு அதாவது முக்தி நிலை , மோட்ச நிலை ! ஆன்மதத்துவம் பகரவில்லை !!! அதனைப் பாராட்ட மண்ணின் இயற்கை நியதியிடம் , இயற்கை தர்மத்திடம்
இயற்கை மதத்திடம் இந்து தர்மம் எனும் சநாதான தர்மத்திடம்
விட்டு விட்டார் .'தனக்குவமை இல்லாதவன் இறைவன் அவனை திருக்குறளில் கண்டு இன்புறுதல் திருவள்ளுவர் நோக்கமல்ல வாழ்க்கை நெறி மட்டும் அவரது நோக்கம் .



நபிகள் நாயகம், யேசுபிரான், புத்தபகவான், குருநாநாக், மற்றும் பிறர்.போல 'தமிழர் வாழ்வியலை' கற்பிக்க வந்த வள்ளுவ பெருமான் கடவுள் என்பவன் உண்டு என்கிறார். கடவுள் பற்றி பேசாதவர் அல்ல வள்ளுவர்.


வள்ளுவர் கடவுளைப் பற்றி எப்படி கூறுகிறார்.


ஆதிபகவன் - முதல் கடவுள் என்கிறார்
வாலறிவன் - தூய அறிவுடையன் என்கிறார்
மலர்மிசை - அடியார்தம் உள்ளத் தாமரைமலரின்
ஏகினான் கண் சென்றமர்பவன் என்கிறார்
வேண்டுதல் - விருப்பு வெறுப்பு அற்றவன் என்கிறார்
வேண்டாமை
இலானடி
பொறிவாயில் - ஐம்பொறிகளின் ஆசைகள்
ஐந்து வித்தான் விட்டவன் என்கிறார்
தனக்குவமை - தனக்கு நிகரில்லாதவன் என்கிறார்
இல்லாதவன்
அறிவாளி - கற்றோன் எனும் அறக்கடல் என்கிறார்
அந்தணன்
எண் - எட்டு வகை குணங்கள். உடையவன்
குணத்தவன் என்கிறார்

திருக்குறள். சாற்றும் பொருளையெல்லாம் தமிழாகவும் ; தமிழரை சமைத்து பக்குவமாக்கும் சமய வாழ்வாகவுமே இருக்கின்றது என்பதை மறுப்பார் யார் ? அத்தகைய திருக்குறளின் வள்ளுவ பெருமானார் , குறள்


நற்றான் தொழார் எனின் 2
மாணடி சேர்த்தார் 3
அடி சேர்தார்க்கல்லால் 4
உவமை இல்லாதான் தாள் 7
அந்தணன் தாள் 8
எண் குணத்தான் தாள் 9
இறைவன் அடி சேராதார் 10
என கடவுள் வாழ்த்து குறள்கள்தோறும் தமிழர்தம் சமய வாழ்வு இறைவன் திருவடி தொழுவதையும் ; திருவடி கோர்வதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பதை எடுத்தியம்புவது கொண்டு அறம், பொருள், இன்பம் சார்ந்த வாழ்வு வீடுபேறு /முக்திநலம் தரும் என்பது அறிய தக்கதாகி இருக்கிறது.


வள்ளுவன் வழி நாம் கண்ட தமிழும் சமயமும் வழுவாகி நிற்க, அடுத்து அறநெறி பாடி வருகிறாள் ஔவை பிராட்டி.


' பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாளும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
தூங்கத் கரிமுகத்து துணிமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் 3- ம் தா '


தன்னிடம் தமிழில் என்ன குறை இருக்கிறது என்று கருதி ஔவை மூதாட்டி தான் தன் கண்ணாரக் கண்ட கரிமுகத்தவனிடம் பொன் பொருள், நகை நட்டு, ஆடை ஆரணம், உண்ண உணவு, இருக்க வீடு, படுக்க சுகம் கேட்காமல், வீடு பேரு /முக்தி/ மோட்சம் எனும் பிறவாமை வரம் கேட்காமல் மூன்று தமிழ்தா என்று கேட்கிறாள் !


தமிழை பாடினாலே அறம் பாடுதல் என்று பொருள்

அறம் பாடினாலே இறைவன் பாடுதல் என்று பொருள்

இறைவனை பாடினாலே அவன்தான் தனக்கு சித்திக்கும்/ கிடைக்கும்
என்பதை நன்கறிந்த ஔவையார் ஏன் இயல், இசை, நாடகம்
எனும் சங்கத் தமிழை இறைவனிடம் கேட்க மாட்டாள் ?



சமஸ்கிருதத்தில் இறைவனைப் பாடினால் அது அவனிடம்
நம்மை போய் சேர்க்கும் . தமிழில் இறைவனை பாடினால்
அது அவனை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்ற திருவாசகமணியார் கூற்றுக்கு ஔவையே ஒப்புடமை உடையவர் .
- தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
- தெய்வம் சீறிட கைத்தவம் மாளும்


இப்படியாக அறவாழ்க்கை பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைகள் இம்மண் எங்கும் பெருகி வர, காலத்தை வென்று வாழும் ஔவையின் மறைகளான நல்வழி, நன்னெறி, மூதுரை, வாக்குண்டாம்,கொன்றை வேந்தன், தனிச் செய்யுள்கள், ஆத்திசூடி போன்றவற்றை தமிழர் வீடுகள்தோறும் பரவச் செய்தல் வேண்டும்.


இறை மறுப்பு கொள்கையினர் நெறி தவறி, வழி தவறி பிழை பட வாழும் இளையோர்பால் மனம் இறங்கி வந்து, தமிழர் இறைநலம் பேணல் வேண்டும் !
திருவள்ளுவர், ஔவை மட்டுமல்லாது சங்கக் காலத்தின் தொகுப்பு நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, களப்பிரர் காலத்து பதினெண் கீழ்கணக்கு, பல்லவர் காலத்து சமயப் புரட்சி & பக்தி புரட்சியின் ஆழ்வார்கள் , நாயன்மார்கள் தமிழ் பலவற்றுள் பிள்ளை தமிழ் முதற் கொண்டு, 18 & 19 -ம் நூற்றாண் டு உரை நடை இயக்கியங்களின் வரை அவ்வப்போது தமிழர் தாழ்ந்து வீழ்ந்து கிடக்க நேரிடும்போதும் தமிழ் சமயத்தோடு வீறிட்டு வளர்ந்து வந்தது.


சைவர்களும் வைணவர்களும் ஆகிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் இறைவனைக் கண்களாரக் கண்டபோது தமிழையே வளர்த்தனர் . அவர்கள் வளர்த்த தமிழுக்கு பின்னால்தான் சமயம் வளர்ந்தது . சமயத்துடன் தமிழும் வளர்ந்தது ; இரண்டும் வெவ்வேறு அல்ல .
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் என்றார் திருநாவுகரசர்.

நீர், பூ, தூபம், கொண்டு பூஜை செய்கையில்
தமிழோடிசைப் பாடல் மறக்க மாட்டேன் என்கிறார் திருநாவுகரசர் .


' பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன் றாகத் தமிழ்ச் செய்யுமாறு ' என்றார் திருமூலர்.
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு இறைவன் படைத்தான் எனும் கூற்றும் இன்றைய தமிழர்தம் செத்து கிடக்கும் தமிழுணர்வை, சமய உணர்வையும் சீண்டி பார்க்கும் .
ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும், சித்தர்களும், சீலர்களும், யோகிகளும், தபசிகளும், சந்நியாசிகளும்,உய்துணர்ந்து சமய வாழ்வை பயிற்றுவிக்கும் போதும் ஏன் இந்த மாந்த மனம் திசை மாறி, திசை தவறி, திசையே அறியாமல் பயணம் செய்கிறது ?
தமிழும் சமயமும் ஒரு கொம்பும் அதை பற்றி படரும் கொடியும் போல எனவாகி இருக்கையில் தமிழ் எழுத்துகள் பலவும் சமயமாகி இருப்பதை தமிழர்கள் நாம் அறிந்து இருத்தல் வேண்டும்.

அவற்றுள் சில.....


ஓம் என்பது பிரணவ மந்திரம். ஜீவராசிகளின் மண்டை ஓட்டின் வடிவம் ஒ/ஓ - வாக வடிக்கப்பட்டு ஓங்காரம் எனும் நாதம் எழுப்புகிறது.



" நவ்விரண்டு காலதாய் நவின்ற மவ்வு வயிறதாய்,
சிவ்விரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய்,
யவ்வு இரண்டு கண்ணதாய் எழுந்து நின்ற நேர்மையில்,
செவ்வைஎழுத்து நின்றதே சிவாயம் ஐஞ்செழுத்துமே .


ஓம் நமசிவாய எனும் ஐஞ்செழுத்து செம்மையாய் எழுந்து நின்ற போதிலே ' சீவனாய் / ஜீவனாய்' நின்றதே என்கிறார் சிவவாக்கியர்.

 தமிழ் வேறு சமயம் வேறு அல்ல; 
தமிழே சமயம் ; 
சமயமே தமிழ் என்பது சிவவாக்கியர் பாடல் வழி   நிரூபிக்கப்படுகிறது.

ஊனுடம்பு ஆலயம் - சதையால் ஆன இந்த உடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர். அதன் அடிப்படையில் ஒரு மானிடன் நீட்டிப் படுக்கையில் ஏற்படும் அமைப்பே கோயில் நெறியாகி இருக்கிறது.


உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோபுர - வாசல்
தெள்ளத் தெளியார்க்குச் சீவன் சிவலிங்கம்,
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே '- திருமந்திரம்
கோயில்கள் சாத்திர முறைப்படி ஒன்பது வாசல்கள் வைத்து காட்டப்படுகிறது. அதன் ஒரு வாசல் வாய் குறிக்கும் கோபுர வாசலாகும். அதனையே திருமூலர் வாய் கோபுர வாசல் என்கிறார்.

தமிழ் உணர்வு விதைக்கப்பட்டால் தமிழ் இந்து சமயம் தானாகவே தழைக்கும் .

No comments: