Photobucket

Friday, November 13, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 3


கவலைப்பட வேண்டிய ஒன்று மறக்கப்பட்டதாக இருக்கிறது


'இந்த உலகம்' பொல்லாதது
நன்றி கெட்டது ....
நன்றி கொன்றது ....


'இந்த உலகம்' கெட்டது
கொடுமையானது
கொடூரமானது


காரியவாதிகளின் காரியாலயமிது
சந்தர்ப்பவாதிகளின் இருப்பிடம் இது


'இந்த உலகம்' எனப்படுவது எது ! யார் !


நானும் நீயும்
அவனும் இவளும்
அவர்களும் இவர்களும் என
எல்லாருமாய் ஆகி இருப்பது உலகம்


'இந்த உலகம்' எனப்படுவது நாம்.
நாம் எனப்படுவது இங்கு மனிதர்கள்.


நாம் பொல்லாதவர்கள்
நாமே நன்றி கெட்டவர்கள் ;
நன்றி கொன்றவர்கள்.
நாம்தான் கொடுமையானவர்கள் ;
கொடூரமானவர்கள்.
நம்மை இன்றி
யார் இங்கு கெட்டவர்கள்
காரியவாதிகள்...
சந்தர்ப்பவாதிகள்..
எல்லாரும் இங்கு நாம்தான்


முழுசாய் நாம் மனிதர்கள்
மொத்தத்தில் நாம் பகுத்தறிவாளர்கள்
நல்லவர்கள்... நல்லது செய்பவர்கள் ;
பகுதி பகுதியாய் நாம் கெட்டவர்கள்
கெட்டது செய்பவர்கள்
கெடுதி நினைப்பவர்கள்
ஆம்...!


நாம் உண்ணுவது இங்கு உணவு
உண்பதற்குள்.... உணவு...
உயிர் வதை இருக்கிறது ;
உயிர் பலி இருக்கிறது ;
கொலை இருக்கிறது '
கொலை பலி... பாவம் இருக்கின்றது
உடல் செத்து போகிறது .
ஆவி (உயிர்) பிரிந்து போகிறது
ஆன்மா நீங்கி விடுகிறது .
எனவே,
நமக்கு நாம் இங்கு நல்லவர்கள்
நமது செயலால் நாம் கெட்டவர்கள்


நல்லதுக்குள் கெட்டது இருக்கிறது .
நன்மைக்குள் தீமை இருக்கிறது .
உண்ணும் உணவு என்னும்
சுகத்துக்குள் துக்கம் இருக்கிறது .
பசி பறந்து போச்சி எனும்
இன்பத்துகுள் துன்பம் இருக்கிறது .


நல்லதுக்குள் கெட்டது
நன்மைக்குள் தீமை
சுகத்துக்குள் துக்கம்
இன்பத்துக்குள் துன்பம்
விருப்பத்துக்குள் வெறுப்பு.... அருவருப்பு
எல்லாம் இங்கு இரட்டைகள்
இரட்டைகளால் ஆன உலகில்
ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது வாழ்க்கை .
ஒன்றை ஒன்று வீழ்த்தி
வாழ்ந்திருப்பது வாழ்க்கை .


இன்னும் கவலைப்பட என்ன இருக்கிறது ?


எல்லாமே இங்கு இயற்கை நீதி ;
இயற்கை நியதி.
இயற்கை சீற்றம் எனும் விதி .
எல்லாமே இங்கு வாழ்க்கை சுழற்ச்சி ;
வாழ்க்கை  சக்கரம் . ..  
கர்மவினைகள்  எனும்  வினையடி  வாழ்க்கை..


இருந்தும் இருக்கிறது ஒரு ஞானம் .
கவலைப்பட வேண்டும் .


கவலைப்பட வேண்டிய ஒன்று
மறக்கப்பட்டதாக இருக்கின்றது .


அறிய வேண்டும் நாம் !
ஆத்மா ஞான கவலைகள்
மறக்கப்பட்டு இருக்கின்றன
.

(ஆக்கம்: 18/11/2001)

No comments: