Photobucket

Wednesday, November 11, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 1


பசித்திருப்பது வாழ்க்கை, தாகத்தில் தவித்திருப்பது வாழ்க்கை


இந்த உலகம் வேறுபாடு நிறைந்தது
வித்தியாசங்களால் ஆனது
விசித்திரமானது

விவகாரங்கள் நிறைந்தது
விகாரங்களால் நிரப்பி இருப்பது
விதி விலக்குகளால் ஆட்டுவிக்கப்படுவது
விதி வசத்தால் ஆனது


இந்த உலகம்
செயல்களால்
செயல்களின் விளைவுகளால்
விளைவுகளின் பலாபலன்களால் ஆனது .
நன்மை தீமைகளால்
நல்லது கெட்டதுகளால்
கர்ம வினை எனப்படுவதாய் இருக்கிறது


ஏதோதோ ....என்னென்னவோ ...
எப்படி எப்படியோ ஆன உலகில்
எப்போதுமே நாம் தவித்திருக்கிறோம் .


தவிப்பு- தீராத தாகமாக இருக்கிறது
தவிப்பு- தீராத பசியாக இருக்கிறது


பசிக்கு உணவும்
தாகத்திற்கு நீரும்
வயிற்றிக்கும் வாயிற்கும் என
ஈயப்படும் இவைகளோடு
அடங்கி போகிறதா வாழ்க்கை ?


உடலுக்கு பசி
உடலுக்கு தாகம்
ஈயப்பட வேண்டும் அதற்கு காமம்


உயிருக்கும் பசி
உயிருக்கும் தாகம்
ஈயப்பட வேண்டும் அதற்கு
அன்பு, பாசங்கள் ...
அரவணைப்புகள்


ஈதல்கள் எல்லாம்
ஈயப்பட்டிருக்கினும்
ஆண்டு ஆண்டு
அனுபவித்து இருப்பினும்
இன்னும் இன்னும் என
தவித்திருப்பது வாழ்க்கை;
பசித்திருப்பது வாழ்க்கை!
சுகத்திற்கு தெத்தி இருப்பது வாழ்க்கை .
ஏங்கி இருப்பது வாழ்க்கை .


மாண்டு மாண்டு அனுபவித்து
மாண்டு போனாலும்
மாய்ந்து போகாத
பசியோடும் தாகத்தோடும்
இனியும் இனியும் என
ஆங்கு ஆவியுலகே ஆயினும்
போராடிக் கொண்டிருப்பது வாழ்க்கை .
போர் புரிவது வாழ்க்கை .


வாழ்க்கை என்பது போர்
வாழ்க்கை என்பது போர்க்களம்
வாழ்க்கை என்பது போராட்டம்

இதில் கவலைப்பட என்ன இருக்கிறது !

இருந்தும் இருக்கிறது ஒரு ஞானம் .


கவலைப் பட வேண்டிய ஒன்று
மறக்கப்பட்டதாக இருக்கிறது


எப்போதுமே இங்கு எக்காலத்துக்குமே
தீர்ந்துப் போகக் கூடிய பசி
தீர்ந்துப் போகக் கூடிய தாகம்
அறிய விரும்பப்பட்ட
மாட்டாதாக இருக்கிறது !
அறிய வேண்டும் நாம் !
ஆத்மாவுக்கு பசி
ஆத்மாவுக்கு தாகம்
தீர்க்க வேண்டும் அதன்
ஆத்ம பசியை .... ;
ஆத்ம தாகத்தை ..... .


வாயிற்கும் வயிற்றிக்கும்
அடங்கா பசி, தாகம்
உடலுக்கும் உயிருக்கும்
மருவிய பசி, தாகம்
வீற்றிருக்கும் ஆன்மா தனில்
வேரற்று வீழ்ந்து விடும் -
ஆரத் தீர்ந்து விடும் .


மறக்கப்பட்ட ஆத்ம தாகம்
மறக்கப்பட்ட ஆத்ம பசி
மீட்கப்பட வேண்டும்
கவலைப்பட வேண்டும் !

( ஆக்கம் : 18/11/2001)


No comments: