Photobucket

Friday, November 13, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 4

இருந்தும் இருக்கிறது ஒரு ஞானம் 'கவலைப் பட வேண்டும்'


மனிதர்கள் நாம்
விவரம் அறிந்தவர்கள்


நாளும் தெரிந்தவர்கள் -பலர்
நன்கு படித்தவர்கள் ; பலர்
நலம் பெறுபவர்கள் ; சிலர்
நலம் கொடுப்பவர்கள்


இந்த உலகியலில்
நாம் வழிப் போக்கர்கள் ;
நடமாடும் நாடோடிகள்
வந்த வழியே
போக வேண்டியவர்கள்.


பலர்க்கு வந்ததும் தெரியாது
வந்த வழியும் தெரியாது .
போகப் போவதன்  வலி  புரியாது ;
போகும் வழியும் தெரியாது....




வந்தவர்கள், வாழ்ந்தவர்கள்
தடம் தெரியாமல், தடம் புரண்டு
இடம் தெரியாமல், இடறி நடந்து
இனி போகப் போகிறார்கள்


சிலர் வந்தவர்கள்
வாழ்ந்து காட்டினார்கள்
பிறரை வாழ்வித்து போனார்கள்


சிலர் வந்தார்கள் ; வாழ்ந்தார்கள்
இடையே சாதித்தார்கள்
பெயர் விளங்கி நின்றார்கள்
அவரவர் வாகைக்குள்
அவரவர் வகைக்குள்
அவரவர் கடமைக்குள் அவரவர்


வருவதும் போவதும் வாழ்க்கை
இருப்பதும் இறப்பதும் இயல்பு
எல்லாம் என்றும் எதார்த்தங்கள்


இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?
இருந்தும் இருக்கிறது ஒரு ஞானம் .
அதன் ஊர் பேர் விலாசம்
'கவலைப்பட
வேண்டும் '


இது நடந்தால் இப்படித்தான் எனும்
கட்டுசெட்டான கவலைகளுக்கு அப்பால் ...
எதார்த்தமான கவலைகள் ;
எத்தேச்சை கவலைகள் ;
சுதந்திரக் கவலைகள்
எப்போதுமே நமக்கு வேண்டும்


நாம் கவலைப்பட வேண்டும்


பட்டும் படாத கவலைகள் ;
தொட்டும் தொடாத கவலைகள்
படாமல் படும் கவலைகள்
பொறுப்பு  எனும்  கவலைகள்
எப்போதுமே நமக்கு வேண்டும் !.




அணைத்தும் அணைக்காத அணைப்புக்குள்
விடாமல் விடுபடும் கவலைகள்
வேண்டும்
அணைக்காமல் அணைக்கும் அணைப்புக்குள்
விட்டு விடுபடும் கவலைகள் வேண்டும்


வானுக்கு மண்ணோடு கவலை இருக்கிறது -
எட்டி நின்று பார்க்கும் கவலை இருக்கிறது !
தொடாமல் தொடும் கவலை இருக்கிறது ;
படாமல் படும் கவலை இருக்கிறது ;
அதனால் மட்டுமே மழைப் பொழிகிறது ;

பெய்விக்கப்...படுகிறது.



மண்ணுக்கு வானோடு கவலை இருக்கிறது -
வழி மேல் விழி வைத்த கவலை இருக்கிறது ;
ஏமாற்றத்துடன் காத்து இருக்கிறது ;
எதிர்ப்பார்ப்புடன் நிற்கிறது ;
அதனால் மட்டுமே மழை பெறுகிறது .



வானுக்கு மண்ணோடு கவலை ;
மண்ணுக்கு வானோடு கவலை -ஆனால்
அவை  பின்னிப்  பிணைந்தா கிடக்கிறது ?
ஒட்டி உறவாடி
யா இருக்கிறது  ?.




நீல  மேகத்தின்   ஊடே
உறையும்  கார்மேக  வானுக்கும் ,
பசுமை  வேண்டும்  மண்ணுக்கும்
எதார்த்தமான... எத்தேச்சையான
எதிர்ப்பார்
ப்புகள்  நிறைந்த  ஏமாற்றங்கள்  கூடிய
கவலைகள் எப்போதும் உண்டு .



நட்பு
பாராட்டும் பரஸ்பர கவலைகள் ...
இப்படியாக இருக்கிறது .
நட்பு
பாராட்டும் பரஸ்பர கவலைகள் ...
இதுபோல் ஆகிறது .



மழை பெய்கிறது
நிலம் குளிர்கிறது


நாமும் கவலைப்பட வேண்டும்


கட்டு செட்டு கவலைகள்....
விட்டு விலக வேண்டும்
எத்தேச்சையான... எதார்த்தமான கவலைக
ளை
நாம் சுற்றிவர வேண்டும்
கவலைகள் நம்மை  சுற்றலாகாது.




கவலைப்பட என்ன இருக்கிறது ...?
எனும் அதற்கு அப்பால்
கவலைப்பட வேண்டும் எனும்
எங்கும் நிறைந்த ஞானம்
இங்கு மறக்கப்பட்டதாக இருக்கிறது !



எல்லாம் இருந்தும் அடைந்தும்
எல்லாம் தெரிந்தும் புரிந்தும்
ஏதேதோ நம்மிடம் எப்போதுமே இல்லை ...


அறிய வேண்டும் நாம் !
நாமும் கவலைப்பட வேண்டும் !.



(ஆக்கம்: 18/11/2001)

No comments: