Photobucket

Monday, November 23, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 7


இயல்புகள் மீறி எதுவும் இயங்க! இருக்கும் கவலைகள் விட்டு விடுவோம்!

சிறகு முளைத்க் குஞ்சு பறவை
கூட்டில் இருப்பது இல்லை .
ஊட்டி வளர்த்த தாய் பறவைக்கு
விடை பெறும் நாள் சொன்னதும் இல்லை .


மரங்கள் பழுத்தப் பழங்களைக்
காம்புகளில் தாங்குவது இல்லை
பழுத்த பழங்கள் அதுபோல
விடுபட தயங்குவதும் இல்லை .


பூத்துக் குலுங்கிய வாச மலர்கள்
மரஞ் செடி
  கொடிகளுக்குச்
சொந்தம் ஆனது  இல்லை -
வளர்த்தக் கடனை 

எதுவும் நினைத்தும் இல்லை.


காய் அதனில் முதிர்ந்த விதைகள்
வெடித்து விடுபட்டு வெளியேறும்
சில காய் அதனில் முளைவிட்டு
முந்தி முளைக்கப் பாடுபடும்


அது அதற்கும் அது பண்பியல்பு
எல்லாம் இங்கு குண நலன்கள்
இயல்புகள் இருக்கும் வகை, வாகை அறிவோம்
கவலைக்கு ஏது இடம் விட்டுவிடுவோம்



நன்றி மறப்பது நன்று ஆவது இல்லை
மறக்கப்படும் நன்றிகளை மறந்து விடுவோம்
செய்த நன்றி  ஆங்காங்கு   மறக்கப் படும்.
இயல்புகள் மீறி எதுவும் இயங்கப் பெறா


உப்பிட்டவரை உள்ள அளவும் -நன்றி
உள்ளத்தில் இருத்துதல் மாந்தர்க் கடன்
உப்புப்பு அற்றதுபோல் மறந்து விட்டால்
விட்ட குறை தொட்ட குறை விட்டுவிடுவோம்


பலன் கருதா சேவைகள் பாரில் வேண்டும்
பற்றற்ற உயர்தர செயல்கள் செய்வோம்
செய்தற்கு நன்றி கடன், பிரதி பலன்
எதிர்ப்பார்த்தல் இருப்பின் அது சுத்தின் நலம்


தென்னையின் வேருக்கு நீர் விட்டால்
தென்னங் காயில் பிறகு
நீர் தருது
எங்கும்  நிறைந்த ஒரு பொது  தருமம்

எப்போதும்  எங்கெங்கும் 
தன் கடன்கள் செய்யும் .
எதோ  ஒரு ரூபத்தில்
நம்மை  வாழ  வைக்கும்.
நன்கு  காத்து  நிற்கும் .



(ஆக்கம்: 18.11.2001)

No comments: